பரந்தூர் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்

விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் பரந்தூர் புறப்பட்டு சென்றார்.;

Update:2025-01-20 10:08 IST

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார்.

இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சற்றுமுன் விஜய் பரந்தூர் புறப்பட்டு சென்றார். போராட்டக்குழுவினரை பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்