ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டியதாக புகார் - கோவையில் இருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.;

Update:2025-06-18 22:22 IST

கோவை,

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்புக்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த அகமது அலி மற்றும் ஜவஹர் சாதிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்