தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த வாலிபரை, 2 பேர் பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.;

Update:2025-11-08 01:56 IST

தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் அஜய்(எ) ஜப்பான் (வயது 21). இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் அஜயை நேற்று முன்தினம் இரவு, இருவர் பைக்கில் பசும்பொன் நகர் அருகே பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக அஜயின் நண்பர்களான பிரயன்ட்நகர் 11வது தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜா(19), பசும்பொன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம்(21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜய், ராஜா, பரமசிவம் ஆகிய 3 பேரும் செல்போன்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளனர். இதுபோல் கடந்த வாரம் ஒரு செல்போனை விற்பனை செய்த அஜய், அதற்கான பணத்தை அவர்களிடம் கொடுக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜா, பரமசிவம் ஆகிய 2 பேரும் சேர்ந்து அஜய்(எ) ஜப்பானை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்