வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுக எதிர்க்கவில்லை: கே.பாலகிருஷ்ணன்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆபத்தானது என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்;

Update:2025-11-07 23:27 IST

சென்னை

சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் கட்சி அலுவகத்தில் உள்ள செங்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது,

எடப்பாடி பழனிசாமி ஒரு புறம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு மற்றொரு புறம் கட்சி அணிகளிடம் விழிப்போடு இருங்கள் என அறிவுறுத்துகிறார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆபத்தானது என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். இருப்பினும். பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் இந்த திருத்தப்பணியினை அ.தி.மு.க. எதிர்க்கவில்லை என்றார். இதே போல, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்