தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு

நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2025-08-25 15:31 IST

சென்னை,

2025-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரியை சேர்ந்த ரெக்ஸ்(எ)ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்