இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ விண்ணப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.;

Update:2025-06-13 13:11 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாட்டு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச்சான்று ஆகியவற்றுடன் அரசு இ-சேவை மையத்தில் முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெறும் பொருட்டு பயனாளியின் வைப்புத்தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதயில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ சமர்ப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்