பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றபோது, மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-10-11 16:16 IST

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி (வயது 62). மேலும் இதே ஊரை சேர்ந்த கந்தசாமி மனைவி செல்லம்மாள் (வயது 55). இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.

இந்த பயிர்களை வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன. இதனை தடுக்க பெரியசாமி என்பவர் தனது வயலை சுற்றி சட்டவிரோதமாக மின் வேலி அமைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பெரியசாமி மற்றும் பக்கத்து நிலத்து உரிமையாளர் செல்லம்மாள் இருவரும் தங்களது நிலத்தில் விளையும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்