ஆன்லைன் செயலி மூலம் கஞ்சா விற்பனை.. சிறுவன் உள்பட இருவர் கைது

இருவரும் ஆன்லைன் செயலியான ‘டெலிகிராம்’ மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது.;

Update:2025-01-26 01:29 IST

சென்னை,

சென்னை திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், பெரவள்ளூர், பாக்யம் தெருவைச் சேர்ந்த நிக்கேஷ் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குமாரி என்பவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் கொடுத்து 2 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, ஆன்லைன் செயலியான 'டெலிகிராம்' மூலம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைதான நிக்கேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை, சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்