மத்திய மந்திரி அமித்ஷா நாளை தமிழகம் வருகை

மத்திய மந்திரி அமித்ஷா நாளை தமிழகத்திற்கு வர உள்ளார்.;

Update:2025-04-09 14:57 IST

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை இரவு தமிழகம் வருகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்