திருவனந்தபுரம்-மங்களூரு இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

திருவனந்தபுரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-13 21:56 IST

கோப்புப்படம் 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வடக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவிற்கு அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 27-ந் தேதி முதல் டிசம்பர் 29-ந் தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06163) இயக்கப்படுகிறது.

அதே போல, மங்களூருவில் இருந்து வடக்கு திருவனந்தபுரத்திற்கு அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மற்றும் 28-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (06164) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்