ராமநாதபுரம் அருகே வேன்-கார் மோதி விபத்து - ஆந்திர சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி
இந்த சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.;
ராமநாதபுரம்,
அரியானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் நேற்று இரவு ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி டெம்போ வேனில் புறப்பட்டனர். அப்போது எதிரே ஆந்திராவில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் கார் ஒன்று வந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமப்பகுதி தேசிய நெடுஞ்சாலை யில் சென்றபோது எதிரே வந்த டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த பைடிசாய் (வயது 23) மற்றும் நவீன் (22) ஆகியோர் காருக் குள்ளேயே நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்த 4 பேர் மற்றும் டெம்போ வேனில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.