விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-11-26 16:33 IST

FILEPIC

சென்னை,

ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகிறோம். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் அடுத்த மாதத்தில் இருந்து வழங்க இருக்கிறோம். அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். இந்த சாதனைச் சரித்திரம் தொடரத்தான் போகிறது. உங்களின் அனைத்து கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நான் நிச்சயம் செய்து கொடுப்பேன். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். மக்களுக்கும் கழக அரசுக்குமான பாசப்பிணைப்பைப் பார்த்து, அதைக் கெடுக்க சதி செய்கிறார்கள். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மக்களின் வாக்குரிமையையே பறிக்கலாமா என்று பார்க்கிறார்கள்.

நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது அதுதான் இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது! ஏனென்றால், திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! கழக ஆட்சிதான் மீண்டும் அமையும்! தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தங்கு தடையின்றி இரு மடங்கு வேகத்துடன் தொடரும்! அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்