காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று சரக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. சோமங்கலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, விபத்து நடந்த பகுதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சோமங்கலம் காவல்நிலையங்களுக்கு இடையேயான எல்லையில் இருப்பதால் விபத்துக்குள்ளான லாரியை அகற்றுவது யார்? வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக குழப்பம் எழுந்துள்ளது.