ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: சிறுமி பலி; 5 பேர் காயம்

ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.;

Update:2025-04-21 08:25 IST

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையில் வாலாஜாப்பேட்டை அடுத்த வாணிச்சத்திரம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றபோது, பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டன.

இதில், ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவரின் 9 வயது மகள் நிஜிதா உயிரிழந்து உள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்