அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்; சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் உள்பட பயணிகள் பலர் அவதியடைந்தனர்.;
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதனிடையே, பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை புறவழிச்சாலையில் இன்று மாலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் உள்பட பயணிகள் பலர் அவதியடைந்தனர்.