வேளாங்கண்ணி பேராலய திருவிழா: தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து 50 சிறப்பு பஸ்கள் வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ஊர்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.