விஜய்க்கு ஒரு பகுதியில் வரவேற்பு உள்ளது: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.;
சிவகங்கை,
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால்தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். பாஜகவுடன் அதிமுக பயணித்தால் தமிழ்நாடு மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். கல்லூரி கட்ட கோயில் நிதியை பயன்படுத்துகிறார்கள் என்ற பழனிசாமி கூறுவது தவறானது.
பழனி கோயில் அறக்கட்டளையே கல்லூரி நடத்துகிறது. கல்விக்காக கோயில் நிதியை செலவிடுவதில் தவறு ஏதும் இல்லை. விஜய்க்கு ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருக்கு ஒரு பகுதியில் வரவேற்பு உள்ளது. அவையெல்லாம் சீட்டுக்களாக மாறுமா என்று தெரியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" இவ்வாறு அவர் கூறினார்.