கோவையில் பெண் கடத்தலா? - உண்மை நிலவரம் என்ன?

பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண், வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2025-11-07 21:37 IST

கோவை,

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், பெண் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சி வெளியான விவகாரத்தில், அப்பெண் கடத்தப்படவில்லை, குடும்ப தகராறே காரணம் என்றும், தகராறில் பெண் கூச்சலிடவே, தவறாக எண்ணி கடத்தல் என புகார் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் (கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்) வீடியோ வெளியிட்டு விளக்கமும் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அப்பெண் கூறி இருப்பதாவது;

”கோவை ராவுத்தர் பிரிவு சாலையில் காரில் சென்றபோது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் உங்களுடன் வரவில்லை என கணவரிடம் கூறிவிட்டு காரை விட்டு இறங்கினேன். அவர் என்னை அடித்தார், நான் பதிலுக்கு அடித்தேன். மகன் இருவரையும் கண்டித்தார். ஏன் மானத்தை வாங்குகிறீர்கள் என மகன் கூறியதும் காரில் ஏறி சென்றுவிட்டோம்.”

இவ்வாறு அப்பெண் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்