திரைப்பட புகழை வைத்து மாயபிம்பத்தை உருவாக்குகிறார்கள்; விஜய் மீது கே.பி.முனுசாமி மறைமுக தாக்கு

விஜயுடன் கூட்டணி கனவில் அ.தி.மு.க. இருந்தது.;

Update:2025-11-07 21:12 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த தளிஅள்ளி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களும் மறைந்து விட்டனர். இவ்வாறான நிலையில், தமிழகத்தில் புதிய கட்சிகள் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் வெளியே சென்று மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்து கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் நடித்தார்கள். அந்த புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல தன்னை முதன்மைப்படுத்தி கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜயுடன் கூட்டணி கனவில் அ.தி.மு.க. இருந்தது. ஆனால் அவர் முதல்-அமைச்சர் வேட்பாளர் என அறிவித்த நிலையில், அவரை மறைமுகமாக கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்