வாக்காளர் திருத்த பணி: திமுகவின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் - நயினார் நாகேந்திரன்
தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்;
நெல்லை,
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.
நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க. வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்..இவ்வாறு அவர் கூறினார்.