மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-20 18:44 IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. அதேவேளை டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 16,341 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.58 அடியாகவும், நீர் இருப்பு 83.601 டி.எம்.சி.ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்