மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.18 அடியாக உள்ளது;

Update:2025-10-12 09:42 IST

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 29 ஆயிரத்து 540 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 115.18 அடியாகவும், நீர் இருப்பு 85.991 டி.எம்.சி.ஆகவும் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்