முசிறி வடகரை பள்ளவாய்க்காலில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடகரை பள்ளவாய்க்காலில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.;

Update:2025-05-29 11:49 IST

முசிறி,

முசிறி பெரியகுளம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது என்றும், எனவே முசிறி வடகரை பள்ளவாய்க்காலில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என தண்ணீர் இன்றி வறண்ட வயல்களில் விவசாயிகள் சோகத்துடன் நின்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இதைக்கண்ட அதிகாரிகள் நேற்று மதியம் வடகரை பள்ளவாய்க்காலில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்