வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்-த.வெ.க
நியாயமான, சுதந்திரமான தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடிப்படை என்று தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார்.;
சென்னை,
த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பனையூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம். பீகாரில் இந்த பிரச்சினை வந்தபோதே நாங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறோம்.
நியாயமான, சுதந்திரமான தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடிப்படை. போலி வாக்காளர்களை சேர்ப்பதும், சரியான வாக்காளர்களை நீக்குவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என குரல் கொடுத்துள்ளோம். அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கொடுக்கா விட்டாலும் நாங்கள் எங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.