‘த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்’ - விஜயபிரபாகரன்
விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது;-
“விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது. அதை தான் த.வெ.க. மாநாட்டில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யை எங்களுக்கு பிடிக்கும், அவர் எங்களுக்கு எதிரி இல்லை. நாங்கள் மக்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம்.
த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9-ந்தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம். சீமான் எதிர்க்கட்சியை பற்றி பேசி தான் பெரிய ஆளாகி உள்ளார். விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் எப்போதும் கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.