திமுக ஆட்சியை ஒழித்து தமிழகத்தை மீட்போம்: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தைத் தலைநிமிரச் செய்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்” என்ற பாடலின் மூலம் நமக்கு தேச உணர்வை ஊட்டிய துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரரும், தீவிர காந்தியவாதியுமான திரு. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்த நாமக்கல் மண்ணில் இன்று நமது பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது.
மூலிகை வளம்மிக்க கொல்லிமலையைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்தின் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன, அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அல்லாடுகின்றனர், பாலியல் தொல்லைகள் தலைவிரித்தாடுகின்றன, போதைப் பொருட்கள் சகஜமாகக் கிடைக்கின்றன, இம்மாவட்டத்தின் உயிர்நாடியான முட்டை ஏற்றுமதி சரிந்துள்ளது. இத்தனைக்கும் காரணமான திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தையும், ஊழல் ஆட்சியையும் ஒழித்து நாமக்கல்லை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் கூடிய விரைவில் மீட்போம்! தமிழகத்தைத் தலைநிமிரச் செய்வோம்.என தெரிவித்துள்ளார் .