மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
புதன்கிழமை தோறும் இரவு 8.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது;
மதுரை,
தென்மாவட்டங்களை சேர்ந்த பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பீகார் மாநிலம் பரூணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, மதுரை-பரூணி சிறப்பு ரெயில் (வ.எண்.06059) மதுரையில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1, 3,15,22, 29 மற்றும் நவம்பர் மாதம் 5,12, 19, 26-ந் தேதி ஆகிய நாட்களில் புதன்கிழமை தோறும் இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு பரூணி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06060) வருகிற 13-ந் தேதி, 20, 27-ந் தேதி, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந் தேதி ஆகிய நாட்களில் சனிக்கிழமை தோறும் நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரெயில், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர், நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, எலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுலம் ரோடு, பலாசா, குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ரக், பலாசோர், காரக்பூர், அண்டுல், தன்குனி, பார்த்தமான், துர்காபூர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசிடிஹ், ஜாஜா, கியூல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.