தவெக எந்த கட்சியுடன் கூட்டணி ? துணை பொதுச்செயலாளர் விளக்கம்

பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்;

Update:2025-05-15 14:18 IST

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் தலைவர் விஜய் எடுப்பார் என தவெக துணை பொதுச்செயலாளர்  நிர்மல்குமார் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது.இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்