அமித்ஷா ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

திமுக ஆட்சியை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என நயினார் தெரிவித்தார்.;

Update:2025-09-05 19:52 IST

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷா ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தது ஏன் என நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது;

“அமித்ஷாவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அண்ணாமலையே விளக்கம் கொடுத்துள்ளார். திருமண விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் காரணமாக வரவில்லை என்று கூறியுள்ளார். எனக்கும் நிறைய திருமண விழாக்கள் இருந்தன. அதில் கலந்துகொள்ள முடியவில்லை. என் தொகுதியில் மட்டும் அன்றைய முகூர்த்த நாளில் 30 திருமணங்கள் இருந்தன. மாநில தலைவர் என்ற முறையில் நான் கூட்டத்தில் பங்கேற்றேன். தேர்தல் நெருங்கி வருவதால், பொதுவான ஆலோசனையில் ஈடுபட்டோம்.

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக ஆட்சியை வீழ்த்துவதே எங்களது நோக்கம். வருகிற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும்..”

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்