எஸ்.ஐ.ஆர்-ஐ பார்த்து திமுகவுக்கு பயம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டு திமுக அஞ்சுவது நியாயமல்ல என டிடிவி தினகரன் கூறினார்.;

Update:2025-11-02 21:38 IST

திருச்சி,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக எதற்காக அஞ்சுகிறது? என்ன தவறு நடக்கப்போகிறது என்று பயப்படுகிறார்கள்? தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி தான் நடக்கிறது. அப்படியிருக்க, தில்லுமுல்லு செய்ய யாரால் முடியும்? இந்த சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையில் பணிபுரிவது தமிழக அரசின் அதிகாரிகள் தான். அவர்கள் திமுக ஆட்சிக்குட்பட்ட அதிகாரிகள். எனவே, ஏதாவது தவறு நடந்துவிடும் என்று திமுக அஞ்சுவது நியாயமல்ல. இதனால் தான் நான் அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

திமுக அரசு தங்கள் மீது நம்பிக்கை இல்லாதது போல நடக்கிறது. அரசியல் பலனுக்காக தேவையில்லாத விவாதங்களை எழுப்புகிறது. மக்களின் கவனத்தை மாற்றும் முயற்சிதான் இது. மேலும், திமுக அரசு தங்களது குறைகளை மறைக்க எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதனால் தமிழக மக்கள் குழப்பமடைகின்றனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்