ராமதாஸ், அன்புமணி இடையே திடீர் மனக்கசப்பு ஏன்? - இயக்குனர் தங்கர் பச்சான் விளக்கம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-06-22 07:23 IST

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார்.

விழாவிற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள திடீர் மனக்கசப்பு குறித்து பேசினார். அவர் கூறுகையில்,

''பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கின்றன. பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்