தமிழக கடற்கரையில் கஞ்சா செடி காய வைப்பா? - தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

கடற்கரையில் வாலிபர் ஒருவர் கஞ்சா செடியை காய வைக்கும் காட்சி சமூக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.;

Update:2026-01-19 00:33 IST

கடற்கரையில் கஞ்சா செடியை காய வைத்து வாலிபர் ஒருவர் ஹாயாக படுத்து உறங்கும் காட்சி சமூக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா போதை ஆசாமிகளால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், திமுக அரசை குற்றம் சாட்டி இந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கஞ்சாவை காய வைத்து இளைஞர் படுத்து உறங்கும் கடற்கரை தமிழ்நாட்டில் இல்லை. கேரளாவில் உள்ள கடற்கரை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்