சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்

பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசார பயணம் மேற்கொண்டார்.;

Update:2025-08-22 10:21 IST

விருத்தாசலம்,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசார பயணம் மேற்கொண்டார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் காலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்ககுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

கேப்டன் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற தொகுதி விருத்தாசலம் தொகுதி. இங்கு வந்தவுடன் கேப்டனுடைய நினைவுகள் வந்து செல்கிறது. நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவேனா? என கேட்கிறீர்கள். இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. கூட்டணி முடிவாக வேண்டும். எத்தனை சீட் கிடைக்கிறது என தெரிய வேண்டும். யாருக்கு எந்த தொகுதி என்பதை பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்க முடியும். நிச்சயமாக ஜனவரி 9-ந்தேதி கடலூருக்கும் திட்டக்குடிக்கும் நடுவில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்