தடை செய்யப்பட்ட ஆமைகளை கடத்தி வந்த பெண்கள் கைது

கடத்தி வரப்பட்ட ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.;

Update:2025-01-31 09:21 IST

மதுரை,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் தடை செய்யப்பட்ட ஆமைகளை கடத்தி வந்த பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர.

இலங்கையிலிருந்து நேற்று மதுரைக்கு ஸ்ரீலங்கன் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணிகளில் இரண்டு பெண்கள் தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாவித்திரி, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த உஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஆமைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பெண்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்