மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி நாளை தொடக்கம்

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.;

Update:2025-07-10 19:01 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025, 16.07.2025, 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வார்டுகளில் தன்னார்வலர்கள் மூலம் 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை மக்களுக்கு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 22.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது, திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-2, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-54, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-95, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-138, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-169, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வார்டு-181 ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலம் 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை மக்களுக்கு வழங்கும் பணியானது நாளை (11.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்