சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பி.ராஜா
ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன் என்று டிஆர்பி ராஜா கூறினார்.;
சென்னை,
நடிகரும் தவெக தலைவருமான விஜய், இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஆளும் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். விஜய் பேசும்போது " சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. ” என்று கேள்வி எழுப்பினார். மேலும், குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?" என காட்டமாக பேசினார்.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன்” என்றார்.