ஆசைவார்த்தைக்கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2025-10-07 08:59 IST

திருப்பூர்,

சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர், திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறுமிக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்