தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-10-10 20:00 IST

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் விஜய் (வயது 32), கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விஜய் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த விஜய் நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்