ஆசைவார்த்தை கூறி மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்

வாலிபர்கள் சமூக வலைதளத்தில் தினந்தோறும் பேசி மாணவிகளிடம் காதல் வலை வீசினர்.;

Update:2025-09-24 19:35 IST

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 15 மற்றும் 13 வயதுடைய மாணவிகள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைதளம் மூலம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான மற்றொரு தினேஷ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் சமூக வலைதளத்தில் தினந்தோறும் பேசி காதல் வலை வீசினர். இதனால் வாலிபர்களுடன், பள்ளி மாணவிகள் நெருங்கி பழகி யாருக்கும் தெரியாமல் தனியாக ஊர் சுற்றி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் இருவரையும் காதல் வலை வீசிய வாலிபர்கள் 2 பேரும் சிறுமிகளை கூடுவாஞ்சேரி வரவைத்து அங்கிருந்து திருப்போரூர் அடுத்த காயார் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் தினேஷ் வீட்டிற்கு ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மாணவிகள் இருவரும் தங்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.

இதற்கிடையே 15 வயது மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தபோது சமூகவலைதளம் மூலம் பழக்கமான வாலிபர்கள் ஆசைவார்த்தை. கூறி கடத்தி சென்று கற்பழித்து இருப்பது தெரிந்தது. மேலும் நருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மாணவிகளை தொடர்ந்து மிரட்டி வாலிபர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் தினேஷ், மற்றொரு தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. ஆட்டோ டிரைவர் தினேஷ் திருமணம் ஆனவர் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்