அதிகாலையில் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது;
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, தரமணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய இந்த மழையானது 5 மணி வரை நீடித்தது. தற்போதும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.