தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-03 13:46 IST

சென்னை,

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை (04-05-2025) தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி மே 5-ஆம் தேதி: நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 6-ஆம் தேதி: ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்