அதிகரிக்கும் வெப்பம்.. தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.;

Update:2025-04-19 20:40 IST

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக

திருத்தணியில் 103.28 டிகிரி பாரன்ஹீட்

மதுரை விமானநிலையம் 103.1 டிகிரி பாரன்ஹீட்

மதுரை மாநகரம் 102.2 டிகிரி பாரன்ஹீட்

கருர் பரமத்தி 102.2 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி 101.66 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு 100.4 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை 99.86 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்