சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.;

Update:2025-06-09 16:37 IST

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது. பின்னர், மிதமான மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்