சிரியா: மத வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு - 8 பேர் பலி
குண்டு வெடிப்பில் 21 பேர் படுகாயமடைந்தனர்.;
டமாஸ்கஸ்,
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் இன்று இஸ்லாமியர்கள் மத வழிபாடு செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மசூதியில் இன்று மதியம் திடீரென குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் மசூதியில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.