துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்; உறுதிப்படுத்திய உள்துறை மந்திரி

துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2026-01-24 14:26 IST

அங்காரா,

துருக்கியில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை அந்நாட்டு உள்துறை மந்திரியான அலி எர்லிகயா உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, அந்நாட்டின் என் சோசியல் என்ற வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 11.04 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதில், யாருக்கும் பாதிப்பு அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டு இருக்கிறதா? என உறுதி செய்வதற்காக உடனடியாக அதற்கான குழுக்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால மேலாண் கழகமும் இதனை உறுதி செய்துள்ளது. கள ஆய்வு பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி, இதே சிந்திர்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்