பாகிஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் பலி
தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.;
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குரேஷி மூர் கிராமத்தில் நேற்று இரவு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிராமத்தலைவர் நூர் அகமது மெஷல் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சிக்கு உடலில் வெடிகுண்டுகளை மறைத்துக்கட்டிக்கொண்டு மர்ம நபர் வந்துள்ளார். அந்த நபர் திருமண நிகழ்ச்சியின்போது பலரும் நடனமாடிக்கொண்டிருந்தபோது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.