முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட அமெரிக்கர் கைது

ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update:2025-09-12 04:44 IST

கான்பெரா,

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் மைக் ஹோல்ஸ்டன். இவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூகவலைதளங்களில் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் ஏராளமான முதலைகள் காணப்படுகின்றன. அங்கு சென்ற அவர் அதில் ஒரு முதலையின் கழுத்தை இறுக பிடித்தார். பின்னர் அதனுடன் மல்யுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் அதுவே அவருக்கு பிரச்சினையாகவும் அமைந்தது. ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்தன. அதன்பேரில் ஆஸ்திரேலிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்