நிதி பற்றாக்குறை: பேராசிரியர்கள் உள்பட 180 பேர் பணிநீக்கம்

பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதி நிறுத்தப்பட்டது.;

Update:2025-05-08 03:29 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.

இதற்கு பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஹார்வர்டு உள்பட நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிதியை நிறுத்தினார். இதனால் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் திணறி வருகிறது.

அந்த வகையில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவந்த ரூ. 3 ஆயிரத்து 382 கோடி நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி பற்றக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பேராசியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட 180 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்