இங்கிலாந்தில் மின் கம்பிகள் சேதமடைந்ததால் ரெயில் சேவை பாதிப்பு

ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.;

Update:2025-07-05 01:45 IST

லண்டன்,

இங்கிலாந்தின் பரபரப்பான ரெயில் நிலையங்களுள் ஒன்று நியூ ஸ்ட்ரீட். இங்கிருந்து லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நியூ ஸ்ட்ரீட் ரெயில் நிலையம் அருகே செல்லும் மின் கம்பி சேதமடைந்தது.

எனவே ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த தொழில்நுட்ப குழுவினர் பழுதான மின் கம்பிகளை சரி செய்தனர். அதன்பிறகே ரெயில் சேவை தொடங்கியது. எனினும் இந்த சம்பவத்தால் லண்டன், கிளாஸ்கோ, கார்டிப் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்