காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 89 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.;

Update:2025-09-10 17:22 IST

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, காங்கோ, உகாண்டா எல்லையில் கூட்டணி ஜனநாயக படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான கூட்டணி ஜனநாயக படை காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் கூட்டணி ஜனநாயக படை பயங்கரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 89 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். நியொடொ நகரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்